Yogi Shiva Mahadev - Tamil (MP3 Music)

CAD 2.00
- +
Links
                       
                  

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.

                       
                       

Product Details

சிவ நாமத்தை மட்டுமே சொல்லி ஆனந்தத்தின் உச்சத்தை எட்டும் அன்பர்கள் ஏராளம் இருக்க, சிவனைப் போற்றி பாடினாலோ சொல்லவும் வேண்டுமா?!

“கவிநயமிக்க பாடல் வரிகளுடன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் ஒரு புதிய இசைப் பாமாலை… யோகி ஷிவா மஹாதேவனைக் கொண்டாடும் காலம் இது, இனிய பாடலால் போற்றி மகிழ்வோம்!
Lyrics:

அடியும் முடியும் அறிய முடியான்
அழகிய வடிவினன் இவன் யாரோ
அகிலம் அதிரும் துடியும் உடையான்
அழகிய வடிவினன் இவன் யாரோ

இரவும் பகலும் சுழலும் உலகும்
இசைந்திட அசைந்திடும் இவன் யாரோ
மழையும் வெயிலும் குளிரும் பனியும்
இசைந்திட அசைந்திடும் இவன் யாரோ

தலையில் சடையும் கையில் சூலப்படையும் புலி
உடையும் நடையும் கொண்ட இவன் யாரோ
இடையில் விடையில் வந்து தடைகள் உடைய
இன்ப மடையைத் திறந்து விட்ட இவன் யாரோ

இருளும் ஒளியும்மென அருளும் பொருளுமென
குளிரும் நெருப்புமென இவனுருவம்
தீமை நன்மையென துன்பம் இன்பமென
இருமை கடந்த ஒரு திருவுருவம்

தன்னை உணர இங்கு தவிக்கும் உயிர்களுக்கு
யோகம் தந்த என் குருமணியே
மொன மொழியும் இரு கருணை விழியும் என
தகந்தை அழியவென வருகிறதே

தழலில் உருகும் சிறு மெழுகை போல மனம்
உருகி உருகி உடன் கரைந்திடவே
தேகம் தாண்டி உண்மை உணரவேண்டி உயிர்
ஜனனமரண மதில் அழியாமல்

வெறுமைகூடி உள்ளம் உருகியோடும் வெள்ளம்
பெருகி எழுந்து வரும் ஊற்றாகி
உருவம் கடந்த ஒரு ஆழத் திருந்து வந்து
அகமும் புறமும் செல்லும் காற்றாகி

யோக நெருப்பில் ஒரு யாகம் நடத்துகின்ற
மூச்சின் சுவாசத்தில் ஒன்றாய் நீ
வானும் மன்ணுமென வளியும் ஒளியுமென
ஊனும் உயிருமென நின்றாய் நீ

உடுக்கை அடிக்க என திதயம் துடிக்க மனப்
பொய்மை அழித்திட வந்தய் நீ
ககன வெளியில் திரு நடனம் புரிந்து என்
மெய்மை உணர்த்திட வந்தாய் நீ"

More Information

More Information
SKU:D-YOGI-SHIVA-MAHADEV-TAMIL
notify

User Reviews

Ratings & Reviews
You will be the first to review this. Give it a go!

    Be the first to know