Purindhadhum Puriyadhadhum

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
கல்லூரிப் பருவம் அனைத்தையும் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு அற்புத பருவம்! ஆனால், தெரிந்து வைத்திருப்பதும், புரிந்துகொண்டுள்ளதும் எந்த அளவிற்கு சரியானது என்பதை மாணவர்கள் பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம்! சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது…
• வணிகத்தில் ‘தேவையும், உற்பத்தியும் (Supply & Demand) எப்படி சாதுர்யமாக கையாளப்படுகிறது என்பது புதிய கோணத்தில் புரியவருகிறது!
• மனிதன் மதத்தை பின்பற்றாவிட்டாலும், மதம் மனிதனைப் பின்பற்றும் அவல நிலையை புரிந்துகொள்ள முடிகிறது!
• மேற்கத்திய கலாச்சாரத்தின் கட்டுப்படுத்தும் மனப்பான்மையைப் பற்றி புரியாத விஷயம் புரியவருகிறது!
இதுபோன்று, மாணவர்கள் தாங்கள் அதுவரை புரிந்திருந்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராக இருந்த பல விஷயங்கள் புரிபடுவதாகவும் அமைகின்றன.
• உலக அமைதி ஏன் இன்னும் சாத்தியமாகவில்லை?
• பூர்வ ஜென்மம் உண்மையா?
என பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சத்குரு. Girl Friend இருக்கலாமா? என மாணவர்கள் கேட்க, காதல் எனும் ஒரு அம்சத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விரிவாக அலசுகிறார் சத்குரு. காதல் என்பது வெறும் கெமிஸ்டிரி மட்டுமா? எனக் கேட்டு, காதல் எவ்வளவு அவசியம் என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்.
இப்படி, இந்தக் காணொலி முழுக்க கல்லூரி மாணவர்களின் இளமை ததும்பும் கேள்விகளும் சத்குருவின் உயிர்ப்பும், தெளிந்த ஞானம் மிக்க பதில்களும் நிறைந்து, வீடியோவை சிறப்பாக்குகின்றன!
Year : 2016
Duration : 2 hr 23 min
More Information
SKU: | D-PURINDHADHUM |