Mana Azhutham, Panichchumai, Pressure (Tamil Video)
Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
மனஅழுத்தம், பணிச்சுமை, பிரஷர்!
– IPS அதிகாரியின் கேள்விகள்
காவல்துறை உயர் அதிகாரியாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி தனது செயல்பாடுகளால் அனைவராலும் கவனிக்கப்பட்டவர் திரு. நடராஜ் IPS அவர்கள். அவர் சத்குருவுடன் கலந்துரையாடிய பதிவின் தொகுப்பாக இந்த ஒளிப்பேழை அமைந்துள்ளது.
• காவல்துறைக்கு ஆன்மீகம் அவசியமா?
• மனஅழுத்தத்தை கடந்து செல்வது எப்படி?
• வேண்டியது சகிப்புத் தன்மையா? ஏற்றுக்கொள்ளும் தன்மையா?
இதுபோன்று, காவல்துறை குறித்து, ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணோட்டத்திலிருந்து கேள்விகளை முன்வைக்கிறார் திரு. நடராஜ் அவர்கள். அவரது கேள்விகளுக்கு சத்குரு அளிக்கும் பதில்கள் காவல்துறை குறித்து நமக்கு புதியதொரு சிந்தனைக் கோணத்தை வழங்குவதாய் அமைகிறது.
• செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களை கையாள்வது எப்படி?
• பாரதத்தை ஒன்றாக வைத்திருக்கும் அடிப்படை அம்சம் என்ன?
• கடவுள் இருக்கிறாரா? அவரை அறியும் வழி என்ன?
• குற்றவாளிகள் உருவாவது ஏன்…?
இதுபோன்று, சமூகம் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் கேள்விகளைக் கேட்க திரு. நடராஜ் அவர்கள் தவறவில்லை. மொத்தத்தில் இந்த கலந்துரையாடலின் மூலம் சத்குருவின் பல்வேறு நிலையிலான தெளிந்த பார்வையும் கருத்துக்களும் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன.
Tamil | 1 hr 9 min
More Information
SKU: | D-MANA-AZHUTHAM |