Bharatham – Maraikkapatta Unnadha Varalaru (video download)

Proceeds from Isha Life are used to bring well-being to people and communities.
Product Details
மனித குலத்தின் தொட்டில், மொழிகளின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், கலாச்சாரத்தின் கொள்ளுப்பாட்டி, விலைமதிப்பில்லா அறிவுக்களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது பாரதம், வர்ணிப்பவர் – மார்க் ட்வைன்.
அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது இந்த நாட்டில்…?
இங்கு எத்தனை எத்தனையோ மகத்தான விஷயங்கள் நடந்திருந்தாலும் அவற்றை பள்ளிக்கூடத்தில் என்றாவது நாம் படித்திருக்கிறோமா? அவர்கள் வந்தார்கள் வென்றார்கள், இவர்கள் வந்தார்கள் கொன்றார்கள் என படித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகளுக்கு என்றாவது கடல் கடந்து சென்று நாட்டை ஆண்ட நம்மவர்களைப் பற்றி சொல்லி இருக்கிறோமா?
• 12,000 வருடங்களுக்கு முன்னமே உழவு செய்தவர்கள் யாரென்று தெரியுமா?
• பல ஆயிரம் வருடங்களாக உலகமெங்கும் பயணித்து வணிகம் செய்தவர்கள் யார்?
• உலகிலேயே பெரிய கோவில் இந்தியாவில் இல்லை, ஆனாலும் அதைக் கட்டியது தமிழர்கள் என்பதை அறிவீர்களா?
• இங்கு பிறந்த அகத்திய முனி, தேசாந்திரமாக சென்று யோகத்தை வழங்கிய வரலாறு தெரியுமா?
• பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த துறைமுகம் தமிழகத்தில் உண்டென்று அறிவீர்களா?
இந்தியர்கள் மறந்தது சில, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது பல. இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படும் பல அம்சங்களை சத்குரு அவர்கள் இந்தக் குறும்படத்தில் அழுத்தம் திருத்தமாக பதிந்திருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் இருக்க வேண்டிய, உத்வேகமளிக்கும் குறும்படம் இது. ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய அற்புத தொகுப்பு இது.
Duration: 1 Hour 13 mins
File Size : 1.08 GB
Product Description
More Information
SKU #: | D-DV-BHARATHAM |
Featured Items: | Yes |
Size: | NA |